உஷார்! எந்தெந்த காய்கறிகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்?

Photo of author

By CineDesk

உஷார்! எந்தெந்த காய்கறிகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்?

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தனது உடல்நலனை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பமான பெண்ணுக்குள் இன்னொரு உயிர் இருப்பதால் சத்தான உணவை சாப்பிட வேண்டும். அதில் காய்கறி, கீரை, பழங்கள் மிகவும் முக்கியமாகும்.

இதனால் கர்ப்பிணி பெண்கள் அனைத்து விதமான காய்கறிகளையும் சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.முக்கியமாக மருத்துவர்களிடம் ஆலோசனை செய்துகொள்வது பாதுகாப்பானது.

கத்திரிக்காயை குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, ஈ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை கொடுக்கும். வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது கர்ப்பிணிப் பெண்களிடத்தில் நீரிழப்பை தடுக்க உதவும்.

உருளைக் கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். அதேபோல் வைட்டமின் சி, பி போன்ற வைட்டமின்களும் இதில் இருப்பதால் தாய்க்கும், சேய்க்கும் வலு சேர்க்கும்.

முட்டைக்கோஸ், கீரை உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, ஈ, கால்சியம், இரும்பு, நார்ச்சத்துகள், தாதுக்கள் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு வலு சேர்க்கும்.

தக்காளியில் வைட்டமின் ஏ, சி அதிகம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசிய தேவையான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, போலிக் அமிலம் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் தக்காளி கொண்டிருக்கிறது. தக்காளியை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது பாதுகாப்பானது. உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது.