திமுக தலைமையை கேட்காமல் வேல்முருகன் கொடுத்த வாக்குறுதி! கடும் அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்

Photo of author

By Parthipan K

திமுக தலைமையை கேட்காமல் வேல்முருகன் கொடுத்த வாக்குறுதி! கடும் அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்

2021 தேர்தலில் திமுக வெற்றி பெற வையுங்கள் வன்னியர்களுக்கு 15 சதவீத உள் இட ஒதுக்கீடு நான் வாங்கி தருவேன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேட்டியளித்துள்ளார்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் பாமக சார்பிலும் மற்றும் வன்னியர் சங்கம் சார்பிலும் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்த பட்ட நிலையில் தற்பொழுது தமிழக அரசு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரப்போவதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத பாமக தரப்பு 15 சதவீத இட ஒதுக்கீடு கேட்டுக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வடதமிழகத்தில் உள்ள வன்னியர்களின் வாக்குகளை பெற வேல்முருகனை வைத்து திமுக புதிய திட்டம் தீட்டி உள்ளது என்று கூறப்படுகிறது.அது என்னவென்றால் வன்னியர்களுக்கு 15% உள் இட ஒதுக்கீடு கொடுப்பது தான் அந்த திட்டம்.ஆனால் இதை திமுக தலைமை அறிவிக்காத நிலையில் தற்போது வேல்முருகன் தன்னிச்சையாக அறிவித்துள்ளது அக்கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது 2021 தேர்தலில் திமுகவிற்கு வன்னியர் மக்கள் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெற வைத்து மு க ஸ்டாலின் அவர்களை முதல்வர் பொறுப்பில் அமர வைத்தால் வன்னியர் மக்களுக்கு 15% உள் இட ஒதுக்கீட்டை நான் வாங்கி தருவேன் என்று அவர் பேசியுள்ளார். மேலும் காமெடி நடிகரான கருணாஸ் வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தைப் பற்றி இழிவாக பேசியதற்கு கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றால் நீங்கள் போராடி வாங்கிக் கொள்ளுங்கள் அதற்காக வன்னியர் சமுதாயத்தை குறை கூறாதீர்கள் என அவர் பேசியுள்ளார்.

இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெற்றி பெற்றால் திமுக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதாக வேல்முருகன் அறிவித்திருப்பது கூட்டணி கட்சியில் உள்ள விசிக, திக மற்றும் திமுக கட்சியின் மற்ற சமுதாய தொண்டர்களுக்கு மிகுந்த அதிருப்தியை உண்டாக்கியுள்ளதாம்.

அது எப்படி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு தருவதாகச் சொல்வது என்றும், மற்ற சாதியினர் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை அவர்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் தராமல் வன்னியர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதேபோல் சமூக வலைத்தளங்களில் சிலர் முதலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிட ஒரு தொகுதியாவது முதலில் கேட்டு வாங்குங்கள் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரே என்றும், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக போராடிக்கொண்டிருக்கும் வன்னிய சமுதாயத்திற்கு அப்போதெல்லாம் ஆதரவு தராத அல்லது முன்பு ஆட்சியில் இருந்தபோது இட ஒதிக்கீடு தராத திமுக தான் இனிமேல் தரப்போகிறதா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாக பேசி வரும் வேல்முருகனுக்கு திமுக சார்பாக இதுவரை ஒரு தொகுதியில் கூட போட்டியிட சீட் கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக அரசு நிறைவேற்றினால் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும், இல்லையென்றால் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் திமுக தலைவர் ஸ்டாலின் தான் இந்த முறை முதல்வராக வருவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.