VITILIGO (Ven Kushtam) : ஒரு மாதத்தில் வெண்குஷ்டம் குணமாக இந்த கசாயம் போதும் 

Photo of author

By Divya

VITILIGO (Ven Kushtam) : ஒரு மாதத்தில் வெண்குஷ்டம் குணமாக இந்த கசாயம் போதும்

வெண்குஷ்டம் : VITILIGO (Ven Kushtam)

உடலில் தோல் மீது ஏற்படக் கூடிய பாதிப்புகளில் ஒன்று வெண்குஷ்டம்(வெண்புள்ளி). இவை முதலில் சிறிது சிறிதாக தோன்றி தோல் முழுவதும் பரவி விடும். இவை நம் உணவுமுறை பழக்கத்தால் ஏற்படும் ஒரு பாதிப்பாக இருக்கிறது. இந்த தோல் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1) தண்ணீர்
2) கருந்துளசி சூரணம்
3) வல்லாரை சூரணம்
4) பெரியா நங்கை சூரணம்
5) வில்வ இலை சூரணம்
6) குப்பைமேனி இலை சூரணம்

சூரணங்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.ஒவ்வொன்றையும் 100 கிராம் அளவிற்கு வாங்கி ஒரு மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளவும்.

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கருந்துளசி சூரணம்,ஒரு தேக்கரண்டி வல்லாரை சூரணம்,ஒரு தேக்கரண்டி பெரியா நங்கை சூரணம்,ஒரு தேக்கரண்டி வில்வ இலை சூரணம் மற்றும் ஒரு தேக்கரண்டி குப்பைமேனி இலை சூரணம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் வெண்புள்ளி நோய் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1) கேரட்
2) உப்பு
3) தண்ணீர்

செய்முறை:-

ஒரு கேரட்டை தோல் சீவி கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து பருகி வந்தால் வெண்புள்ளி பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1) ஆவாரம் பூ பொடி
2) தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஆவாரம்பூ பொடி சேர்த்து சுண்டக் காய்ச்சி அருந்தி வந்தால் வெண்புள்ளி பாதிப்பு குணமாகும்.