ஆண்மை குறைபாட்டை நீக்கும் பூனைக்காலி எனும் வயாகரா!! இதை எப்படி பயன்படுத்துவது?

Photo of author

By Gayathri

தற்பொழுது ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.ஆண்மை குறைபாட்டால் பாலியல் உறவு கடுமையாக பாதிக்கப்படுவதால் ஆண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

 

ஆண்மை குறைபாட்டை சரி செய்ய பூனைக்காலி விதையை பயன்படுத்தலாம்.இதில் சிறிது நச்சுத் தன்மை கலந்திருப்பதால் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)பூனைக்காலி விதை – ஒரு கப்

2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

 

செய்முறை விளக்கம்:

 

முதலில் நாட்டு மருந்து கடைக்கு சென்று 200 கிராம் அளவிற்கு பூனைக்காலி விதை வாங்கிக் கொள்ளுங்கள்.

 

பிறகு ஒரு அகலமான கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வாங்கி வந்த பூனைக்காலி விதையை போட்டு நாள் முழுவதும் ஊற விடுங்கள்.

 

பூனைக்காலி விதை தண்ணீரில் நன்கு ஊறி வந்ததும் அதன் தோலை நீக்கிவிட்டு ஒரு காட்டன் துணியில் பரப்பி வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.பூனைக்காலி விதையை தோல் நீக்கிவிட்டு தான் பயன்படுத்த வேண்டும்.

 

பூனைக்காலி விதை நன்கு காய்ந்து வந்ததும் அதை வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

 

அடுத்து ஜல்லடை கொண்டு அரைத்த பவுடரை சலித்து ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.

 

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பூனைக்காலி பொடி கால் தேக்கரண்டி அளவு நீரில் கலந்து கொள்ளவும்.அதன் பிறகு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை அதில் கலந்து பருக வேண்டும்.

 

அதேபோல் எலுமிச்சைக்கு மாற்றாக தூயத் தேனை பூனைக்காலி நீரில் கலந்து பருகலாம்.ஆண்மை குறைபாட்டை போக்குவதோடு நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த இந்த பானம் உதவுகிறது.