காதல் திரைப்படத்தில் மாஸ் காட்ட இருக்கும் விஜய் ஆண்டனி!! விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு!!

Photo of author

By Amutha

காதல் திரைப்படத்தில் மாஸ் காட்ட இருக்கும் விஜய் ஆண்டனி!! விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு!!

நடிகரும் இசையமைப்பாளரும் ஆகிய விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் சினிமா உலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக உயர்ந்துள்ளார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் இவரது படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

விஜய் ஆண்டனி இந்த வருடம் பிச்சைக்காரன் 2, தமிழரசன், கொலை ஆகிய படங்களில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் தற்போது அவர் கைவசம் மேலும் ஐந்து படங்கள் உள்ளன.

இந்த சூழ்நிலையில் தற்போது தனது 24 வது படமாக ரோமியோ என்ற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கிறார். இந்த படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், உள்பட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி, நடிக்க இருக்கிறார். மேலும் இவர்களுடன் விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, உள்பட பலரும் நடிக்கிறார்கள். காதல் திரைப்படமான இந்த படத்தை விநாயகர் வைத்தியநாதன் இயக்குகிறார்.

மேலும் இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். இந்தப் படத்தை அவர் குட் டெவில் என்ற பட நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தயாரிப்பதோடு மட்டுமில்லாமல் எடிட்டிங் வேலையும் அவரே செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் விஜய் ஆண்டனி நடிப்பில் காதல் திரைப்படத்தையும் மக்கள் ரசிக்கலாம்.