பில்டப் செய்து மொக்கை வாங்கிய விஜய் ஆண்டனி!! தனுஷுடன் நடந்த தரமான சம்பவம்!!

0
119
Vijay Antony who bought a knee after building up!! Quality incident with Dhanush!!
Vijay Antony who bought a knee after building up!! Quality incident with Dhanush!!

பில்டப் செய்து மொக்கை வாங்கிய விஜய் ஆண்டனி!! தனுஷுடன் நடந்த தரமான சம்பவம்!!

தமிழ் திரையுலகில் நடிப்பிலும் சரி, இசை அமைப்பதிலும் சரி, பாடல்கள் பாடுவதிலும் சரி என அனைத்திலுமே சிறந்து விளங்கக்கூடிய ஒருவர் தான் நடிகரும் இசை அமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி ஆவார்.

ஆரம்பத்தில் ஒலி பொறியாளராக பணியாற்றிய இவர் தனது திறமையால் இன்று ஒரு மிகப்பெரிய மனிதராக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெருமளவில் பேசப்பட்டு வந்தது. இவரின் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இசையில் மட்டுமல்லாது, நடிப்பிலும் இவர் திறமையை காட்டிய படங்கள் தான் சலீம், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, காளி, கொலைகாரன், கோடியில் ஒருவன் மற்றும் திமிரு புடிச்சவன் முதலியவை ஆகும்.

இவர் தனது இசை மற்றும் நடிப்பு அனுபவங்களை சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அதில் தன்னுடன் நடித்த பல நடிகர்களையும் பற்றி கூறினார்.

அந்த வரிசையில் நடிகர் தனுஷுடன் நடந்த சம்பவம் ஒன்றை கூறினார். சூப்பர் ஸ்டாரின் மனைவி லதா ரஜினிகாந்த் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் விஜய் ஆண்டனி ஒலி பொறியாளராக பணிபுரிந்த போதுதான் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் –யின் பழக்கம் ஏற்பட்டது. இவர் தனுஷுடன் திருமணமான சில நாட்கள் கழித்து அவரை அழைத்துக்கொண்டு விஜய் ஆண்டனியிடம் வந்து இவருக்கு இசையில் ஆர்வம் உள்ளது.

இவருக்கு இசையில் சில தகவல் தெரிய வேண்டுமாம். எனவே, நீங்கள் சொல்லிக் கொடுங்கள் என்று கூறி உள்ளார். தனக்கு தான் இசையில் எல்லாம் தெரியும் என்று மனதில் நினைத்தபடி தனுஷுடன் பேசி உள்ளார். ஆனால் அதன்பிறகு தான் இவருக்கு தெரிந்தது தன்னை விட தனுஷ் இசையில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருக்கிறார். எனவே, இசையில் தனுஷ் எனக்கு குரு என்றும், இவர் மிகுந்த இசைஞானம் கொண்டவர் என்றும் அவர் அளித்த பேட்டியில் பெருமிதமாக கூறி உள்ளார்.

Previous articleஇனி டைரக்சனுக்கு சரிப்பட்டு வரமாட்டார்!! நடிப்பில் பிச்சு உதறும் கௌதம் மேனன்!!
Next articleவிவகாரமாக கேள்விகேட்ட ரசிகருக்கு வில்லங்கமாக பதில் கூறிய பிரியா பவானி சங்கர்!! வைரலான பதிவு!!