எல்லையில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி.!!

Photo of author

By Jayachandiran

இந்திய – சீன எல்லை பகுதியில் நடந்த சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்தில் விஜய் ரசிகர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்தியா மற்றும் சீன நாடுகளின் எல்லை பகுதியான லடாக்கில் நீண்ட நாட்களாக எல்லை சிக்கல் இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி இந்திய ராணுவ வீரர்களுடன் சீன ராணுவம் சிறு மோதல்களில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் எல்லையில் நடந்த மோதலில் தமிழக வீரர் பழனி என்பவர் வீர மரணம் அடைந்த சம்பவம் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது வீரமரணம் அடைந்த பழனி அவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயை தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பாக வழங்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் போஸ்டர் அடிப்பது, பேனர் வைத்து பட்டாசு வெடித்து கொண்டாடி பணத்தை வீணாக்குவது வழக்கம். இந்த முறை தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் தளபதியின் பிறந்தநாளை கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டு எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு காசோலையாக பணம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் செயல்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.