மருந்து விற்பனை கடைக்கு மாறுவேடத்தில் சென்ற அமைச்சர்! அதிர்ந்துபோன ஊழியர்கள்!

0
62

மருந்து விற்பனை கடைக்கு ஆய்வு செய்ய மாறுவேடத்தில் அமைச்சர் சென்ற பகீர் சம்பவம் அங்கிருந்த ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றும் தாதா பூஸ் தன்னை ஒரு விவசாயி போல் மாற்றிக்கொண்டு ஆய்வு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலி வாடிக்கையாளரை அனுப்பி உண்மையை சோதனை செய்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது; சில கடைக்காரர்கள் யூரியாவுடன் மற்ற விவசாய பொருட்களையும் வாங்குமாறு வற்புறுத்தியதாக எனக்கு தகவல் வந்தது. இதையடுத்து புகாரை சரிபார்க்க நான் ஒரு விவசாயி போல் முகத்தைக் கட்டிக்கொண்டு நவபாரத் என்ற மருந்து கடைக்கு சென்றேன். அங்கு வாடிக்கையாளராக யூரியா மருந்தினை கேட்டபோது விற்பனையாளர் எனக்கு தரமறுத்துவிட்டதாக அமைச்சர் கூறினார்.

இதனையடுத்து தனது அடையாளத்தை அமைச்சர் வெளிப்படுத்தியபோது மருந்து கடை விற்பனையாளர்கள் அதிர்ந்து போயினர். இதன்பின்னர் மருந்துகடையை விரிவாக ஆய்வு செய்ய உத்தரவிட்டதோடு மருந்துதரக் கட்டுப்பாட்டுத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை விடுப்பில் அனுப்பினார். அமைச்சர் அதிரடியாக களத்தில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Jayachandiran