மேடையில் இருந்து தெறித்து ஓடும் விஜய் தேவரகொண்டா!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

மேடையில் இருந்து தெறித்து ஓடும் விஜய் தேவரகொண்டா!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

விஜய் தேவரகொண்டா தற்பொழுது தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார்.இவர் 2011 ம் ஆண்டு நுவ்விலா என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின்னர் தனது நடிப்பு திறமையின் மூலம் முன்னணி நடிகராக தன்னை நிலை நிறுத்தி கொண்டார்.அதன் பிறகு அர்ஜுன் ரெட்டி என்னும் படத்தில் நடித்தன் மூலம்  இளைஞர்களிடையே தனக்கு என்று தனி இடத்தை பிடித்தார்.

அதன் பிற்கு அவர் தான் நடிக்க உள்ள அனைத்து கதாபாத்திரத்திலும் மிகவும் கவனமாக இருந்தார்.இவர் ஹீரோவாக மட்டுமலாமல் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் அதிலும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.அதன்படி தான் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த மாகநதி என்னும் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் வியக்க வைத்தார்.

 சமீபத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு படத்தின் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில்  பல்லாயிரம் பேர் திரண்டு இருந்தனர்.

அங்கு உள்ள ரசிகர்கள் எப்படியாவது தனக்கு பிடித்த ஹீரோவை பார்த்து விட வேண்டும் அவருடன் போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்று ஆரவாரமாக ஒலி எழுப்பி கொண்டு இருந்தனர்.

அப்படி ஒரு நிகழ்வுதான் விஜய் தேவரகொண்டாவுக்கு நிகழ்ந்துள்ளது. அவர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் அவரின் வெறித்தனமான ரசிகர் திடீரென்று ஓடி வந்து விஜய் தேவரகொண்டா அவர்களின் காலில் விழுந்தார்.

இதனை பார்த்த விஜய் தேவரகொண்டா திடிரென்று அதிர்ச்சி அடைந்து அந்த மேடையை விட்டு தெறித்து ஓடினார். இது தொடர்புடைய வீடியோ தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு வருகின்றது.