பாய்காட் ட்ரண்ட்டால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன… விஜய் தேவரகொண்டா கருத்து

0
143

பாய்காட் ட்ரண்ட்டால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன… விஜய் தேவரகொண்டா கருத்து

சமீபகாலமாக வட இந்தியாவில் படங்களுக்கு எதிராக பாய்காட் ட்ரண்ட்கள் உருவாகி வருகின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் இந்தியாவில் சகிப்பின்மை அதிகமாகியுள்ளது எனக் கூறியது சலசலப்புகளை உண்டாக்கியது. இப்போது அவரின் படமான லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்கவேண்டும் என சமுகவலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்படுகின்றன. படம் வெளியாகி மோசமான வசூலைப் பெற்றுள்ள நிலையில் அதற்கு இந்த பாய்காட் ட்ரண்ட்டும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் வரும் காலங்களில் ஷாருக் கான் உள்ளிட்டவர்கள் படங்கள் ரிலீஸ் ஆகும் போதும் இதுபோல ஹேஷ்டேக்குகள் பரப்பப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது இந்த பாய்காட் ட்ரண்ட் பற்றி நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “இந்த பாய்காட் ட்ரண்ட்டிங் தவறான புரிதல்களால் நடக்கிறது. இதனால் பாதிகப்படுவது அமீர்கான் மட்டுமல்ல. அந்த படத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானவர்களின் குடும்பங்களும்தான். அவர்களின் வேலை வாய்ப்பும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படலாம்” எனக் கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகிறது.

பாய்காட் ட்ரண்ட் குறித்து பட ரிலீஸின் போது அமீர் கான் “என் படத்தை யாராவது பார்க்கவேண்டாம் என நினைத்தால் அவர்களை நான் புரிந்து கொள்கிறேன். இந்த படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம்.” எனக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Previous articleவங்கியில் அனைத்தும் தனியார் மயமாக்கும் நடவடிக்கை! மோடி அரசை வன்மையாக கண்டித்து காங்கிரஸ் டூவிட்டர் பதிவு!
Next articleகோப்ரா படத்தின் சென்சார் & ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்