தல-யை காபி அடிக்கும் தளபதி!! தல ரசிகர்கள் பாராட்டு!!

Photo of author

By CineDesk

தல-யை காபி அடிக்கும் தளபதி!! தல ரசிகர்கள் பாராட்டு!!

CineDesk

vijay is copying ajith's action!!

தல-யை காபி அடிக்கும் தளபதி!! தல ரசிகர்கள் பாராட்டு!!

தல அஜித் குமார் அவர்கள் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்புகள்  கடந்த சில வருடங்களாக நடை பெற்று வருகிறது. மேலும் இது குறித்த தகவல் ஏதும் வராத நிலையில் தல அஜித் குமாரின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த மாதம் 1 ஆம் தல அஜித் குமார் அவர்களின் பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் முதல் பார்வை வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்தியாவில் தொடர்ந்து வரும் கொரோனா பரவல் 2 ஆம் அலை காரணமாக ரசிகர்களின் பொது நலன் கருதி அப்படத்தின் முதல் பார்வை தள்ளிவைக்கப்பட்டது.

மேலும் தற்போது தளபதி விஜய் அவர்கள் நடிப்பில், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா பரவி வரும் கால கட்டத்திலும்   பரபரப்பாக நடைபெற்று வந்தது. அதைத் தொடந்து தற்போது தல அஜித்-ஐ போலவே தளபதி விஜய் அவர்களும் சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பினை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதற்கிணங்க படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது.