மீண்டும் விலையுயர்ந்த கார்.. தளபதி விஜய் வீட்டின் ரகசிய புகைப்படம் லீக்.!

Photo of author

By Jayachithra

தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் தளபதி விஜய். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குவதாக ஒரு தகவல் கூறுகிறது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது.

மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பார். இந்த திரைப்படத்தில் ஹீரோவை மொக்கையாக காட்டிவிட்டு வில்லனை மாஸாக இயக்குனர் காட்டிவிட்டார் என்று தளபதி ரசிகர்கள் குமுறி வருகின்றனர். இந்தக் குமுறல் தற்போது வரை தொடர்கிறது.

தற்போது விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பீஸ்ட் படத்திற்கு பின்பு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ஒரு திரைப்படத்தை நடிக்க இருக்கிறார்.

தற்போது இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர், தயாரிப்பாளர் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி இணையத்தில் விவாதப் பொருளாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு விஜய் ரோல்ஸ் ராய் கார் வாங்கிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார்.

இத்தகைய நிலையில், நீலாங்கரையில் இருக்கும் விஜயின் வீட்டிற்குள் விலை உயர்ந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கார் Mustang GT வகையைச் சேர்ந்தது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது.