டபுள் ஹீரோ சப்ஜெட்டில் நடிக்கும் விஜய் சேதுபதி!! இனி சூப்பர் ஹிட் இயக்குனருடன் மட்டும் கூட்டு சேர்வதாக அதிரடி அறிவிப்பு!!
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் இறுதியில் வெளிவந்த படம் விக்ரம். விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும்மல்ல வில்லனாகவும் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களையே மிரள வைத்துள்ளார்.
ஆரம்ப கால கட்டத்தில் துணை கதைபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் தனது நடிப்பின் மூலம் இப்பொழுது அவர் சென்ற உயரம் மிக அதிகம். தனக்கு எந்த கதாபாத்திரம் மிக சரியாக இருக்கும் என்பதை ஆராய்ந்து நடிப்பதில் மிக கவனம் கொண்டவர்.
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றது.அந்த வகையில் அவர்களில் தயாரிப்பில் இறுதியில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மட்டும் இரண்டு நல்ல வசூலை பெற்று தந்தது.
இதனை தொடர்ந்து இந்தியன் பாகம் 2 மற்றும் லால் சலாம் என்ற இரண்டு பாடங்களை கை வசம் வைத்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் லைக்கா நிறுவனத்தின் மீது அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சமையத்தில் லைக்கா நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளது.அது இரண்டு ஹீரோக்களை வைத்து எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவருடன் மலையாள நடிகர் நிவின் பாலி மற்றொரு ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகின்றது.
இந்த கூட்டணி இணைந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர் பார்ப்பு கிளம்பியது.இதனால் இப்படம் குறித்து ஆதிக்கரபூர்வமாக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.