தீபாவளி சரவெடிக்கு தயாரான விஜய் டிவி… இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ஒளிபரப்ப முடிவு!

0
111

தீபாவளி சரவெடிக்கு தயாரான விஜய் டிவி… இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ஒளிபரப்ப முடிவு!

விக்ரம் திரைப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது.

கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் இப்படி ஒரு ஹிட் படம் அமையவில்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு ஹிட் படமாக அமைந்தது விக்ரம். இந்த படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என பக்கபலமாக பல நட்சத்திரங்கள் இருந்து செயல்பட்டனர்.

இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. வெளியானது முதல் உடனடியாக பாஸிட்டிவ் ரிப்போர்ட்களைப் பெற்ற விக்ரம் திரைப்படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு படமும் படைக்காத வசூல் சாதனை இது.

விக்ரம் தொடங்கிய இந்த வசூல் மழையை தற்போது பொன்னியின் செல்வனும் தொடர்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படமான விக்ரம் தீபாவளி அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட உள்ளது. தீபாவளி அன்று மாலை 5.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதே நாளில் சன் தொலைக்காட்சியில் பீஸ்ட் திரைப்படம் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.