விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கூறிய கருத்து !
சினிமா உலகில் எண்ணற்ற நடிகர் நடிகைகள் தங்களது ஆரம்ப கட்ட காலத்தில் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வரும் அவர்கள், பின்னாளில் பணம், பேர், புகழ், அடைந்தவுடன் அவர்களுக்கும் அரசியலில் நுழைந்து புகழ் பெற வேண்டும் என்ற ஆசை துளிர்விடுவது இயல்பான ஒன்றாக உள்ளது. அந்த வரிசையில் எண்ணற்ற நடிகர்கள் வந்திருந்தாலும் சில நபர்கள் மட்டுமே நிலைத்து நின்று தங்களது வெற்றி கொடியை அரசியலில் நாட்டுகின்றனர்.
நடிகர்கள் தான் படங்களில் மக்கள் கவனத்தை தன் பக்கம் கவரும் வகையில் அரசியல் வசனங்கள் பேசுவதும், எதிர் கட்சி, ஆளும் கட்சி, மற்றும் அரசியல் அமைப்புகளை சேர்ந்தவர்களை பற்றி அரசியல் வசனம் பேசி மெல்ல மெல்ல தங்களது அரசியல் நுழைவுக்கான இடத்தை நிரப்புகின்றனர்.
தமிழ் திரையுலகில் அரசியல் வசனம் பேசி நடிக்காத நடிகர்களே இல்லை என கூறும் அளவிற்கு தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளனர். அந்த வரிசையில் தமிழில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ரசிகர்களால் தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் விஜய் தனது திரையுலக ஆரம்ப கால கட்டத்தில், அவர் பேசாத அரசியல் வசனங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தனது தந்தையின் வசனம் மற்றும் இயக்கத்தில் அரசியல் பேசி படங்களில் நடித்து வந்தார்.
விஜய் நடிக்கும் படங்களில் நிச்சயமாக அரசியல் வசனங்கள் இல்லாமல் இருக்காது என்றளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அதிரடியாய் அரசியல் குறித்து பேசி நடித்திருப்பார். மேலும் கடந்த நகர்ப்புற ஊராட்சி தேர்தலில் அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்த 56 பேர் வெற்றி பெற்று உள்ளாட்சி பதவிகளை வகித்து வருகிறார்கள்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த சூழ்நிலையில் தான் தமிழக அரசியல்வாதிகள், விஜய்யின் இந்த செயல் குறித்து தங்களது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர்.
தமிழக அரசியலில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யின் அரசியல் நுழைவு குறித்து கூறுகையில், நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை செய்து வருகிறார், அதை நான் வரவேற்கிறேன், அவர் வரும் போது மாற்று அரசியலுக்கான தேவை அதிகமாக இருக்கும் நான் ஏன் அவரை ஆதரிக்க வேண்டும்? நான் யாரையும் ஆதரிக்கப்போவது இல்லை, அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும்.
சீமான் இவ்வாறு விஜய்யின் அரசியல் நுழைவு குறித்து கூறியிருப்பது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அவர் ஆதரவு தர வேண்டும் என்பதை மறைமுகமாக கூறுகிறாரோ என்றே தோன்றுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.