கர்நாடகாவில் சூடு பிடிக்கும் தேர்தல் களம் : கோடிக்கணக்கில் சொத்துக்கள்

0
146
#image_title
கர்நாடாகாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் : கோடிக்கணக்கில்  சொத்துக்கள்

விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் கர்நாடக மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களின் சொத்து பட்டியலின் விவரம், கேட்போரை சற்று தலைச்சுற்ற வைக்கிறது.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான தீவிர வாக்குச் சேகரிப்பில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கர்நாடக மாநில கட்சிகளும், தேசியக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறிய சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முக்கிய வேட்பாளரான டி.கே. சிவக்குமார் தனது வேட்பு மனுவில், தனக்கு  1414 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, அவரது சொத்து மதிப்பு  840 கோடி ரூபாய் ஆகும்.

இதுபோல, என். நாகராஜூ 1,614 கோடி ரூபாய் தனக்கு சொத்துக்கள் உள்ளதாகவும், கூறியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு 1015 கோடி ரூபாய் மட்டுமே தனக்கு சொத்து மதிப்பு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல முக்கிய வேட்பாளரான கர்நாடக முன்னாள் முதலவர் குமாரசாமி அவர்கள் தனது வேட்புமனுவில் சொத்து மதிப்பாக 181 கோடி ரூபாய் தற்போது இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவர் ஜனார்த்தன ரெட்டி கொப்பால் மாவட்டம், கங்காவதியிலும்; இவரது மனைவி லட்சுமி அருணா, பல்லாரி நகர தொகுதி வேட்பாளராக நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மனுவில் குறிப்பிட்டுள்ள படி, கணவர், மனைவி இருவரும் கோடீஸ்வரர்கள். லட்சுமி அருணாவிடம், 104.38 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்தும்; ரெட்டியிடம் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்தும் இருக்கிறது.

இவர்களிடம், 84.7 கிலோ தங்க நகைகள்; 112 வீடுகள், நிலம், வணிக வளாகங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். கர்நாடக மாநில கல்யாண பிரகதி கட்சி தலைவர் ஜனார்த்தன ரெட்டி தம்பதியிடம் 84 கிலோ தங்க நகைகள், 112 கட்டடங்கள் உள்ளன.

மேலும் பல வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் தங்கள் சொத்து மதிப்பு உள்ளது தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாநில சட்டமன்றத் தேர்தலின் போது வேட்பாளர்கள் காட்டும் சொத்து மதிப்பை விட இது பலமடங்கு உயர்வு என்பது தற்போதைய நிலையாக  கூறப்படுகிறது.