வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் விக்ரம்! சேது முதல் தங்கலான் வரை!!

0
55
#image_title

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் விக்ரம்! சேது முதல் தங்கலான் வரை!!

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து சிறப்பாக நடிக்கும் நடிகர்களில் சியான் விக்ரம் அவர்களும் ஒருவர். சியான் விக்ரம் இது வரை பல கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இருப்பினும் ஒரு சில கதாப்பாத்திரங்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவில் பேசப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் சேது திரைப்படத்தில் நடித்த கதாப்பாத்திரம், பிதாமகன் கதாப்பாத்திரம், அந்நியன் கதாப்பாத்திரம் அனைத்தும் மக்கள் மத்தியில் இன்றளவில் பேசப்பட்டு வருகின்றது. நடிகர் சியான் விக்ரம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் கதாப்பாத்திரத்திற்கு தகுந்த வகையில் அவருடைய உடலையும் ஏற்றி இறக்கி நடிப்பார். அது போல நடிகர் சியான் விக்ரம் நடித்த வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சேது…

இயக்குநர் பாலா நடிப்பில் நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடித்த திரைப்படம் சேது. இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றுத்தந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் முதல் பாதியில் சாதாரணமான மனிதனாகவும் இரண்டாவது பாதியில் மனநலம் பாதிகப்பட்ட நபராக நடித்த இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் இன்று வரை பேசப்பட்டு வருகின்றது. சேது திரைப்படத்தில் இருந்து நடிகர் விக்ரம் சியான் விக்ரமாக மாறினார்.

காசி…

இயக்குநர் வினயன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்த திரைப்படம் காசி. இந்த திரைப்படம் 1999ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் கண் தெரியாத நபராக படம் முழுவதும் நடித்திருப்பார். இந்த திரைப்படம் நடிகர் சியான் விக்ரம் அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.

பிதாமகன்…

சேது திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சியான் விக்ரம் இரண்டாவது முறையாக இயக்குநர் பாலா இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் அவர்களின் நடிப்பு மக்கள் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் அவர்கள் சித்தன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

அந்நியன்…

நடிகர் சியான் விக்ரம் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் வெளியான அன்னியன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் நடிகர் சியான் விக்ரம் அம்பி கதாப்பாத்திரத்திலும் அந்நியன் கதாப்பாத்திரத்திலும் நடித்திருப்பார்.

தெய்வத்திருமகள்…

நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடிப்பில் இயக்குநர் இயக்குநர் ஏ.எல் விஜய் அவர்களின் இயக்கத்தில் 2011ம் ஆண்டு தெய்வத்திருமகள் திரைப்படம் வெளியானது. இதில் நடிகர் சியான் விக்ரம் அவர்கள் மனநலம் குன்றிய நபராக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடிகர் சியான் அவர்களின் நடிப்பு பாராட்டத்தக்கது.

ஐ…

அன்னியன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சியான் விக்ரம் அவர்கள் இரண்டாவது முறையாக இயக்குநர். ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ திரைப்படத்தில் நடித்தார். ஐ திரைப்படத்திற்காக நடிகர் சியான் விக்ரம் அவர்கள் உடலை கட்டுமஸ்தாக ஏற்றினார். பின்னர் மீண்டும் அதே திரைப்படத்திற்காக உடலை மீண்டும் குறைத்தார். ஐ திரைப்படத்தை பார்த்தாலே சியான் விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்பது தெரிய வரும்.

இருமுகன்…

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் திரைப்படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கினார். இந்த திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் டிரான்ஸ்ஜென்ட்ர் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படமும் நடிகர் சியான் விக்ரம் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது.

பொன்னியின் செல்வன் 1 & 2…

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இராவணன் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு மீண்டும் நடிகர் சியான் விக்ரம் அவர்கள் இரண்டாவது முறையாக பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன். 2 திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இளவரசன் கதாப்பாத்திரத்தில் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் மக்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டு வருகின்றது.

தங்கலான்…

தற்பொழுது நடிகர் சியான் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 2024ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியாஙவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் அவர்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடைய கெட்டப்பை பார்க்கும் பொழுது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.