அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் பாஜக அணிகள் போல செயல்படுகிறது! காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பதிவு!!

0
66
#image_title

அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் பாஜக அணிகள் போல செயல்படுகிறது! காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பதிவு!!

பாஜக கட்சியின் அணிகளில் இருப்பது போலத்தான் அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் செயல்பட்டு வருகின்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள் எக்ஸ் பக்கத்தின் மூலமாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா, மத்திபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்து கொண்டு சாம, பேத, தான தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது எதிர்க்கட்சிகளை வீழ்த்தி விட வேண்டும் என்று கடுமையான முயற்சிகளை பாஜக அரசு செயல்படுத்தி வருகின்றது என்று கே.எஸ் அழகிரி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது எதிர்கட்சிகளை வீழ்த்திவிட வேண்டுமென்று கடுமையான முயற்சிகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த இலக்கை அடைவதற்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய மத்திய அரசு நிறுவனங்களை பயன்படுத்தி எதிர்கட்சி ஆளுகிற மாநிலங்களிலும், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் எதிர்கட்சித் தலைவர்கள் மீதும், மாநில அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சோதனைகள் மூலமாக எதிர்கட்சிகளை முடக்கி விடலாம் என்று பா.ஜ.க. அரசு கனவு காண்கிறது” என்று பதிவு செய்துள்ளார்.