கோடிக்கணக்கில் பணத்தை இழந்த அஜித் பட வில்லன் நடிகர்!! அட கடவுளே இவருக்கா?? இந்த நிலைமை!! 

0
135
Villain actor Ajith lost crores of money!! Oh my god is this him?? This situation!!
Villain actor Ajith lost crores of money!! Oh my god is this him?? This situation!!

கோடிக்கணக்கில் பணத்தை இழந்த அஜித் பட வில்லன் நடிகர்!! அட கடவுளே இவருக்கா?? இந்த நிலைமை!!

தமிழில் அஜித் படத்தில் வில்லனாக நடித்த நடிகரின் கோடிக்கணக்கான பணத்தை ஒரு கும்பல் ஏமாற்றி உள்ளது. திரைப்பட நிறுவனத்தின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி பணத்தை தவறான வழியில் பயன்படுத்தியதாக விவேக் ஓபராய் சார்பில் அளிக்கப்பட புகாரின் பேரில் 3 பேரின் மீது காவல் நிலையத்தில்  வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழில் விவேகம், மலையாளத்தில் லூசிஃபர், கடுவா, ஆகிய படங்களில் நடித்துள்ளவர் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். திரைப்பட நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என சஞ்சய் சாஹா உள்பட 3 பேர் அளித்த உறுதியின் அடிப்படையில் விவேக் ஓபராய்  கோடிக்கணக்கில்  முதலீடு செய்துள்ளார். இதில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரும், அவரின் 2 கூட்டாளிகளும் விவேக் ஓபராயை திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்ய அறிவுரை கூறியுள்ளனர்.

இதனை நம்பியே அவர் சுமார் 1.55 கோடி முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த பணத்தை குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தவறான வழியில் பயன்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக விவேக் ஓபராய் மற்றும் அவரது மனைவி பிரியங்கா சார்பில் பிரதிநிதி விவேக் என்பவர் மும்பை போலீசில் இந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளார்.

மோசடி தெரிய வந்ததை தொடர்ந்து விவேக் தனது பங்குகளை வேறு ஒரு நிறுவனத்திற்கு மாற்ற முடிவு செய்ததாகவும், அந்த மூவரும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அந்தேரி கிழக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleகுடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!!
Next articleஇன்று தொடங்கிய அமைச்சரவை கூட்டம்!! மகளிர் உரிமை தொகை முதியோர் உதவித்தொகை குறித்து விவாதம்!!