விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. ருசியான பிடி கொழுகட்டை சுலபமாக செய்யும் முறை!!
இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் இன்னும் வேண்டுமென்று அனைவரும் கேட்டு வாங்கி உண்பார்கள்.இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்:-
*அரிசி மாவு – 1 கப்
*பாசிப்பருப்பு – 4 டீஸ்பூன்
*வெல்லம் – 1/4 கப்
*நெய் – 1 டீஸ்பூன்
*ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
*தேங்காய் – 1/4 கப் (துருவியது)
*உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:-
1.அடுப்பில் கடாய் வைத்து குறைந்த தீயில் அரிசி மாவை சேர்த்து 5 நிமிடம் வரை வறுக்கவும்.
2.அதே கடாயில் குறைந்த தீயில் பாசிப்பருப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின்னர் 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
3.தண்ணீர் கொதித்ததும் வெல்லம்,நெய்,தேங்காய் துருவல் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
4.பின்னர் அதில் வறுத்த அரிசி மாவு சேர்த்து மாவு பதத்திற்கு கிண்டவும்.
5.பிறகு அடுப்பை அணைத்து விட்டு மாவு முற்றிலும் ஆறியவுடன் கொழுக்கட்டை பிடித்து கொள்ளவும்.இந்த முறையில் செய்தால் கொழுக்கட்டை மிகவும் சுவையாக இருக்கும்.மறக்காமல் இதனை செய்து பாருங்கள்.