அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தின் கேனோஷா நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வன்முறை நீடிக்கிறது. நிலைமையைச் சமாளிக்கக் கூடுதல் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற 29 வயது கறுப்பின இளையர் காவல்துறையால் சுடப்பட்டார். அதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் வன்முறை வெடித்தது. செவ்வாய் இரவு நடந்த வன்செயல்களில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமுற்றார். 17 வயது வெள்ளையின இளையர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயுதமேந்திய கும்பலுடன் அவரும் சேர்ந்திருந்ததாகத் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிளேக்கின் உடல்நிலை தேறிவருகிறது. ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால்தான் அவரால் எழுந்து நடக்கமுடியும் என்று குடும்பத்தினர் கூறினர்.