ஆப்பாயில் போட தாமதமானதால் ஆத்திரம்! தஞ்சையில் பரபரப்புச் செயல்!

Photo of author

By Parthipan K

ஆப்பாயில் போட தாமதமானதால் ஆத்திரம்! தஞ்சையில் பரபரப்புச் செயல்!

தஞ்சாவூரில் காவலர்கள் இருவர் குடி போதையில் செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சை நாஞ்சிகோட்டை சாலையில் உள்ள ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் ஆயுதப் படையில் தலைமைக் காவலராக உள்ளார்.மேலும் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருண்குமார்.இவர்கள் இருவரும் தங்கள் நண்பருடன் சேர்ந்து உணவு உண்பதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளனர்.

இவர்களின் நண்பரின் பெயர் விஜி.இவர்கள் மூவரும் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் சாப்பிட சென்றனர்.அங்கு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஆப்பாயில் கேட்டுள்ளனர்.ஆப்பாயில் சொல்லி அதிக நேரம் ஆகியும் வராததால் அவர்கள் மூவரும் ஆத்திரத்தில் அந்த கடையில் வேலை செய்யும் 15 வயது சிறுவனை கடுமையாக திட்டியுள்ளனர்.இதனை அறிந்த கடை உரிமையாளர் ராம்குமார் அவர்களை தடுத்ததால் ஆத்திரத்தில் கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

இந்த சம்பவத்தால் கடை உரிமையாளரின் மனைவி காயமடைந்தார்.மேலும் காவலர் அருண்குமாருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.இந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு அவர்கள் மூன்று பேர் மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் இந்த வலக்கை பதிவு செய்தனர்.மேலும் விசாரணையும் செய்து வருகின்றனர்.இந்த மூன்று நபர்களும் சம்பவம் நடந்தபோது குடிபோதையில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் காவலர்கள் அருண்குமார் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி ரவளிபிரியா நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலும் அவர்களின் நண்பரான விஜி இந்த சம்பவத்திற்கு பிறகு தலைமறைவாகி விட்டார்.தலைமறைவான விஜியை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.