சிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற விராட் கோஹ்லி!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!! 

0
32
#image_title
சிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற விராட் கோஹ்லி!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!
நேற்று(அக்டோபர்8) நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த விராட் கோஹ்லி அவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.
13வது உலகக் கோப்பை தொடர்பு இந்தியாவில் முக்கியமான நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்நிலையில் நேற்று(அக்டோபர்8) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது.
டாஸ் என்று முதலில் பேட் செய் ஆஸ்திரேலியா 199 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 2 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்பொழுது களமிறங்கிய விராட் கோஹ்லி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து 116 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்துவிட்டு ஆட்டமிழந்தார்.
பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பீல்டிங்கிளும் விராட் கோஹ்லி அவர்கள் சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணியின் பந்துவீச்சாளர் புகார் அவர்கள் வீசிய பந்தை ஆஸ்திரேலியா அணியின் தொடங்கிய வீரர் மிட்செல் மார்ஷ் தூக்கி அடிக்க அது ஸ்லிப் சைடு சென்றது. அந்த பந்தை பாய்ந்து டைவ் அடித்து கேட்ச் பிடித்து மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்க முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் ஆடம் சாம்பா அவர்களின் விக்கெட்டையும் விராட் கோஹ்லி அவர்கள் கேட்ச் பிடித்து ஹார்திக் பாண்டியாவுக்கு ஒரு விக்கெட்டை சேர்த்தார். இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது.
உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு இந்திய அணி சார்பாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்றைய(அக்டோபர்8) போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த விராட் கோஹ்லி அவர்களுக்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப் அவர்கள் தங்கப் பதக்கத்தை கொடுத்தார்.
இது தொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.