பார்சல் டெலிவிரி சேவையில் டன்சோவுக்கு எதிராக களமிறங்கும் ஓலா நிறுவனம்!!! சபாஷ் சரியான போட்டி!!!

0
50
#image_title

பார்சல் டெலிவிரி சேவையில் டன்சோவுக்கு எதிராக களமிறங்கும் ஓலா நிறுவனம்!!! சபாஷ் சரியான போட்டி!!!

பார்சல் டெலிவரி செய்யும் டான்சி நிறுவனத்துக்கு போட்டியாக ஒலா நிறுவனமும் பார்சல் டெலிவரி செய்யும் வேலையில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

டன்சோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உணவு, மருந்துகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருள்களை வீடுகளில் டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகின்றது. மேலும் கனரக பொருள்களை இடமாற்றம் செய்யும் சேவையையும் வாடிக்கையாளர்களுக்கு டன்சோ நிறுவனம் வழங்கி வருகின்றது.

டன்சோ நிறுவனம் கர்நாடக மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரபல கார் சேவை மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஒலா நிறுவனம் டன்சோ நிறுவனத்திற்கு போட்டியாக பார்சல் டெலிவரி செய்யும் சேவையில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

வாடிக்கையாளர்களுக்கு பார்சல் டெலிவரி செய்யும் சேவையை ஓலா நிறுவனத்தின் மின்னணு வாகன தயாரிப்பு பிரிவு கூடுதலாக வழங்க திட்டமிட்டு இருக்கின்றது. ஒலா பார்சல் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி பொருட்களை அனுப்பும் சேவையை பெங்களூருவில் தற்பொழுது தொடங்கியுள்ளது.

காற்று மாசுபாடு தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பார்சல் டெலிவரி செய்யும் சேவையில் ஒலா நிறுவனத்தின் தயாரிப்பான மின்னணு வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வாடிக்கையாளர்களுக்கு பார்சல் டெலிவரி செய்யும் சேவையை ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவேஷ் அகர்வால் அவர்கள் தொடங்கிய வைத்தார்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பவேஷ் அகர்வால் அவர்கள் “பார்சல் டெலிவரி செய்வதற்கு 5 காலை மீட்டருக்கு 25 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல 10 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், 15 கிலோ மீட்டருக்கு 75 ரூபாயும், 20 கிலோ மீட்டருக்கு 100 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சேவை இந்தியா முழுவதும் கொண்டு வரப்படவுள்ளது” என்று கூறியுள்ளார்.