விருச்சிகம் இன்றைய ராசிபலன்; செலவு அதிகரிக்கும் நாள்

Photo of author

By CineDesk

விருச்சிகம் இன்றைய ராசிபலன்; செலவு அதிகரிக்கும் நாள்

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை திருப்திகரமாக அமையும். பொருளாதார சிறப்பாக இருந்தாலும் செலவுகள் இருப்பதால் சற்று சிரமப்பட வேண்டி வரலாம்.

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சில செலவுகள் வந்து சேரலாம். அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையை அன்பர்கள் வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு திடீரென வெளியூர் பிரயாணம் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மனமகிழ்வார்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இன்பமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எதிர் பாராத ஒரு தன வரவு வந்து சேரலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடைய அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.