சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால்!! அவருக்கு உடலில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா?

0
283
Vishal went to Kerala for treatment!! Does he have so many problems with his body?
Vishal went to Kerala for treatment!! Does he have so many problems with his body?

சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால்!! அவருக்கு உடலில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் சண்டக்கோழி 1 மற்றும் 2, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 45 வயதாகும் விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிகர் சங்க கட்டிடத்தை காட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி வருகிறார்.

இவரின் முந்தைய படமான லத்தி திரைப்படம் தோல்வியடைந்ததை அடுத்து, நல்ல கதைகளையும், இயக்குனர்களையும் தேர்வு செய்து படங்களில் நடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறார். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார். இது டைம் டிராவல் சம்பந்தப் பட்ட படம்.

இந்த படத்திற்கு விஷால் டப்பிங் பேசவேண்டும். ஆனால் அவர் டப்பிங் பேசுவதற்குள் அவருடைய  உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. அதாவது அவரால் நீண்ட நேரம் நிற்க முடிவதில்லை, முதுகு தண்டில் பயங்கர வலி, கண் பாதிப்பு, தலைவலி என பலவிதமான பிரச்சினைகள் அவரது உடலில் உள்ளது. இதனால் டப்பிங்கை விட்டுவிட்டு இயற்கையான முறையில் சிகிச்சை பெறுவதற்காக கேரளா சென்றுள்ளார்.

இவர் சிகிச்சை முடிந்து வந்தவுடன் மார்க் ஆண்டனி படத்திற்கு டப்பிங் பேசி விட்டு, இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

Previous article3 தரிசன சேவைகள் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!
Next articleசெல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!!