விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!!

0
235
#image_title

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!!

மலையாள மொழி பேசும் மக்களால் விஷு கனி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும், கேரள மக்கள் வருடப் பிறப்பாக இதனை கொண்டாடுகின்றனர்

கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஒரு சில பகுதிகளில் விசு கனி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரளாவில் மேட மாதத்தின் முதல் நாள் விஷு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விஷு நாளை அங்கு புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடி வருகின்றனர். வேளாண்மையை செழிப்படைய செய்ய வேண்டிக் கொள்ளும் விழாவாகவும் விழாவாகவும் விஷு விழா கொண்டாடப்படுகிறது.

விஷு கனி விழாவையொட்டி, முன்னாள் இரவு வீட்டில் கிருஷ்ணர் படத்தின் முன்பாக தங்க நகைகள், பழங்கள், தென்னம் பூ, முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளிட்டவை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு காலையில் எழுந்த உடன் முதலில் சென்று அதனை பார்ப்பார்கள்.

கிருஷ்ணரை வழிபட்டு மகிழ்ச்சியையும், செழிப்பையும் வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வர்.

இந்த விஷு கனி திருவிழாவையொட்டி கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த விஷு கனி தினத்தில் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் விஷு கனி சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றது. விஷு திருவிழாவையொட்டி ஏராளமான பொதுமக்கள் இன்று அதிகாலை முதலே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

விஷு கனி நாளில் வழிபடும்போது ஆண்டு முழுவதும் தங்களுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் கிடைக்கும் என்பதால் காலை முதலே ஐயப்பன் கோயிலில் கூட்டம் அலைமோதியது.

மலையாள மொழி பேசும் மக்கள் திரளானோர் தங்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து வழிபட்டனர்.

விஷு கனி திருவிழாவையொட்டி இக்கோயில் முன்பு பிரம்மாண்டமான பொம்மை யானை கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த யானையின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

Previous articleகண் குறைபாட்டை நீக்கும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!!
Next articleகிருஷ்ணகிரியில் ஆணவக் கொலை!! மகனைக் கொலை செய்த தந்தை மருமகள் பலத்த காயம்.. தடுத்த பாட்டியும் வெட்டிக் கொலை!!