வெறும் காலில் நடந்தால் இரத்த ஓட்டம் சீராகிறதா..!!

Photo of author

By Parthipan K

உணவருந்தும் போது கூட காலில் செருப்பு அணிந்திருப்பதை அந்தஸ்தாக கருதும் தலைமுறையில் நாம் வாழ்கின்றோம்.

ஒருவர் அணிந்திருக்கும் செருப்பின் விலையிலிருந்தே அவருடைய சமூக நிலையை மதிப்பிடுகிறது இன்றைய சமூகம். உடற்பயிற்சிக்காக நடக்கும்போது இறுக்கிப் பிடிக்கும் ‘ஷூஸ்’ அணிவது சமூகத்தில் கட்டாயமாகின்றது. ‘மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்’ என்ற தாழ்வு மனப்பான்மையை இக்கட்டாயத்தை ஏற்படுத்துகின்றது. வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள் தங்களை எளியவர்கள் என மதிப்பீடுவார்களே என்ற பிரச்சனை பலரையும் கவலைக்குள்ளாக்குகின்றது.

வெறும் காலில் சிறிது நேரம் நடந்தால் இரத்த ஓட்டம் சீராகும், தூக்கத்தை மேம்படுத்தும், கால் வீக்கத்தை குறைக்கும். மேலும், ஆரோக்கியமான வாழ்வுக்கும் வழிவகுக்கிறது என்று நவீன மருத்துவ இயல் கண்டறிந்துள்ளது.

கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகத்தில் நேரடியாக அழுத்தம் ஏற்படுகின்றது. இது உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் என்று கண்டறிந்துள்ளனர். பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை, இருதயம், சிறுநீரகம் முதலிய எல்லா உறுப்புகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்றலை துரிதப்படுத்தும். பாதத்திற்கு அடியில் ஊசியால் குத்தி செய்யும் அக்குபஞ்சர் என்னும் சிகிச்சையின் மறு உருவமே செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடப்பதாகும்.