தமிழகத்தில் இந்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்:! தமிழக அரசின் அறிவிப்பு!

0
75

தமிழகத்தில் இந்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்:! தமிழக அரசின் அறிவிப்பு!

தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்து, இன்று முதல் செப்டம்பர் மாதம் இறுதிவரை எட்டாம் கட்ட ஊரடங்கு,பல்வேறு தளர்வுகளுடன்
அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இன்றிலிருந்து பொது போக்குவரத்தை இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு, நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளை இயக்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை,மதுரை,திருச்சி திருநெல்வேலி,பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் இயக்கப்பட வேண்டிய 1174 அரசு விரைவுப் பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.

ஆனால் அரசு விரைவு பேருந்துகள் பொதுப்போக்குவரத்துகான செயல்முறைகள்
இயக்கப்படவில்லை என்றாலும், தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை குழுவாக அழைத்து வருவதற்கும், திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தொலை தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் அரசு விரைவு பேருந்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு பொது போக்குவரத்து கழகம் சார்பில் கூறியுள்ளது.விரைவு பேருந்து வசதி தேவைப்படுவோருக்கு,
9445014402, 9445014416, 9445014424, 9445014463 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் அரசு பேருந்துகள் (local buses)மாவட்டங்களுக்குள்ளே மட்டும் இயக்கப்படும் என்றும்,போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

author avatar
Pavithra