காண்டம் வேண்டுமா? என மாணவியிடம் கேள்வி! ஐஏஎஸ் அதிகாரியின் அத்து மீறல்!

Photo of author

By Parthipan K

மாணவி கேட்ட எளிதான கேள்வி! அநாகரிகமாக பேசிய பெண் ஐஏஎஸ் அதிகாரி இப்போ இதை கேட்பீங்க.. அதையும் எதிர்பார்ப்பீங்க… 

பீகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் ஒரு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கருத்தரங்கில் பள்ளி மாணவி  ஒருவர் கருத்தரங்கில் கேட்ட எளிய கேள்விக்கு பெண் அதிகாரி சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருத்தரங்கில் மாணவி குறைந்த விலையில் 20 அல்லது 30 ரூபாய்க்கு அரசாங்கம் சானிட்டரி நாப்கின்களை வழங்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழக தலைவரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் பாம்ரா கருத்தரங்கில் உள்ள அனைவரையும் முகம் சுளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.

பாம்ரா கூறியதாவது, நாளை அரசாங்கம் ஜீன்ஸ் பேண்டும் தரலாம் என்றும் சொல்வீர்கள், அதற்கு பிறகு ஏன் சில அழகான ஷூக்கள் தரக் கூடாது? என்பீர்கள், கடைசியில் அரசாங்கம் குடும்ப கட்டுப்பாடு முறைகள் மற்றும் ஆணுறைகள் ஆகியவற்றை கொடுக்கும் என்றும் எதிர்பார்ப்பீர்கள் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அப்போது மற்றொரு மாணவி ‘மக்கள் போடும் ஓட்டுகள் தானே அரசாங்கத்தை உருவாக்குகின்றது’ என்று கேட்க, அதற்கு பாம்ரா அவர்கள் “இது முட்டாள்தனத்தின் உச்சம்”. அப்படியானால் ஓட்டு போடாதீர்கள். பாகிஸ்தான் போன்று மாறுங்கள். நீங்கள் பணத்திற்காகவும் சேவைகளுக்காகவும் ஓட்டு போடுகிறீர்களா? என்று எதிர் கேள்வி எழுப்பினார்.

பிறகு தனது கருத்தை திசை திருப்பும் வகையில் அவர், எதுவாக இருந்தாலும் நீங்கள் அரசாங்கத்திடம் இருந்து ஏன் பெற வேண்டும்? இந்த சிந்தனையே தவறானது. உங்கள் தேவையை நீங்களே பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார். இந்த கருத்தரங்கில் நடந்த உரையாடல் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. எனினும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பெண்கள் உரிமைகள் மற்றும் அதிகாரம் பெறுவதற்காக அதிகமாக குரல் கொடுப்பவர்களில் நானும் ஒருத்தி என்றும், இப்போது எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இதுபோன்ற சில கீழ்த்தரமான முயற்சிகளை சிலர் இறங்கியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.