இலவச வீடு வேண்டுமா? அப்போ இந்த தகுதி இருக்கானு செக் பண்ணிட்டு விண்ணப்பம் செய்யுங்கள்!

இலவச வீடு வேண்டுமா? அப்போ இந்த தகுதி இருக்கானு செக் பண்ணிட்டு விண்ணப்பம் செய்யுங்கள்!

வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீடு கட்டி தரும் ‘ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களும், வீடு கட்ட இயலாத மக்களும் தகுதியானவர்கள் ஆவர். இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பலரது சொந்த வீடு கனவு நிறைவேறி இருக்கின்றது.

பயனுள்ள இந்த திட்டத்தில் பயனாளிகளாக வேண்டும் என்றால் என்னென்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும்.

*இந்த திட்டத்தில் பயன்பெற முதல் தகுதி விண்ணப்பதாரர் இந்தியராக இருக்க வேண்டும்.

*வீடின்றி வாழ்ந்து வரும் நபர்களுக்கு முன்னுரிமை.

*கூரை வீட்டில் குடி இருப்பவர்களும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

*மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் பயன்பெற முடியும்.

*குறைந்த ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பத்தினர், சொந்தமாக நிலம் இல்லாமல் இருப்பவர்கள் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.

*வயது வரம்பு: 18 வயதை கடந்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய தகுதி பெற்றவர்கள் ஆவர்.

‘ஆவாஸ் யோஜனா’ – இலவச வீடு கட்டி தரும் திட்டம்: விண்ணப்பம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்…

*ஆதார்

*பேங்க் பாஸ் புக்

*விண்ணப்பம் செய்பவர்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

*வேலை குறித்த விவரம்

*ஆண்டு வருமானத்திற்கு சான்று

*எஸ்பிஎன் பதிவு எண்

*பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண்

எவ்வாறு விண்ணப்பம் செய்வது?

https://pmaymis.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்திற்கு சென்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரத்தை பதிவு செய்து தேவையான அவண நகலை பதிவேற்றம் செய்து பயன்பெறவும்.