முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? இதோ பீட்ரூட் பேஷியல்!!

Photo of author

By Gayathri

முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? இதோ பீட்ரூட் பேஷியல்

பெண்கள் தான் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பீட்ரூட்டை சிறந்த தேர்வாக எடுத்துக்கொள்ளலாம். பீட்ரூட் உடலுக்கு மட்டுமல்ல முக அழகிற்கு முக்கிய பங்காற்றுக்கிறது.

பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் 12 கிடைக்கும். மேலும் நம் உடலில் உள்ள இரத்த அணுக்கள் உற்பத்தி செய்யும்.

சரி வாங்க பீட்ரூட்டை வைத்து எப்படி நம் முகத்தை அழகாக்கலாம் என்று பார்ப்போம் –

பீட்ரூட்டை தோல் சீவி, அதன் சாற்றை எடுத்து, அந்த சாற்றில் கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு மாவு சேர்த்து கலந்து முகத்தில் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் முகத்தில் ஊற வைத்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.

பீட்ரூட்டின் சாற்றில் சிறிது கற்றாழை சாறு,பன்னீர் அல்லது பால் சேர்த்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவடையும்.

பீட்ரூட் ஃபேஷியல்

பீட்ரூட்டை எடுத்து அதன் தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி, அதை மிக்ஸியில் போட்டு ஜூஸை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஜூஸ்ஸில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, 2  ஸ்பூன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளபளவென பொலிவடையும்.
இந்த ஃபேஸ் பேக்கினை வாரத்தில் 2 இரண்டு முறை செய்யலாம். இப்படி செய்தால் முகத்தில் உள்ள பருக்களினால் ஏற்படும் தழும்புகள் மறைந்து முகம் பளிச்சிடும்.