பத்து நிமிடத்தில் முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அதற்கு சில எளிமையான டிப்ஸ் இதோ!

Photo of author

By Sakthi

பத்து நிமிடத்தில் முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அதற்கு சில எளிமையான டிப்ஸ் இதோ!

Sakthi

பத்து நிமிடத்தில் முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அதற்கு சில எளிமையான டிப்ஸ் இதோ!

வெறும் பத்து நிமிடத்தில் பொலிவு இன்றி இருக்கும் நம்முடைய முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு உதவும் எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவின். மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

நாம் நம்முடைய முக அழகிற்காக அதிக கவனம் செலுத்தி பல பொருட்களை பயன்படுத்தி வருகின்றோம். பல இயற்கையான மற்றும் செயற்கையான சிகிச்சை முறைகளையும் நாம் பின்பற்றி வருகின்றோம்.

இதில் சில முறைகள் நம்முடைய முகத்திற்கு பளபளப்பான தோற்றத்தை தருகின்றதோ இல்லையோ ஆனால் பருக்கள், கருமையான நிறம் போன்ற பக்க விளைவுகளை தந்து விடுகின்றது. பின்னர் இதை சரி செய்ய தனியாக நாம் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு பதிலாக வெறும் பத்து நிமிடத்தில் முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு உதவும் சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பத்து நிமிடத்தில் முகத்தை பளபளப்பாக மாற்ற உதவும் வழிமுறைகள்…

* எலுமிச்சம் பழம் முகத்திற்கும் சறுமத்திற்கும் பல நன்மைகளை தருகின்றது. எலுமிச்சையில் விட்டமின் சி சத்துக்கள் இருக்கின்றது. எலுமிச்சம் பழச்சாறை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும். கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நிறம் மறையும்.

* அதே போல தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்துக் கொள்ள வேண்டும். தேனில் உள்ள சத்துக்கள் கரும்புள்ளிகளை நீக்கிவிடும். மேலும் சருமம் பளபளப்பாக மாறும்.

* முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு தயிரை பயன்படுத்தலாம். தயிர் முகத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. தயிருடன் தேனை கலந்து அதை முகத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழிந்து தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் முகம் பளபளப்பாக மாறும்.

* அதே போல மஞ்சள் தூளையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம். மஞ்சள் தூளில் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் இருக்கின்றது. எனவே மஞ்சள் தூளுடன் தேன் மற்றும் தயிர் கலந்து முகத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழிந்து முகத்தை தண்ணீரால் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.