வீட்டில் பணம் நிரம்பி வழிய வேண்டுமா? அப்போ இந்த சுலபமான வழியை பாலோ செய்யுங்கள் போதும்!!

0
108
#image_title

வீட்டில் பணம் நிரம்பி வழிய வேண்டுமா? அப்போ இந்த சுலபமான வழியை பாலோ செய்யுங்கள் போதும்!!

இன்றைய வாழ்க்கை சூழலில் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் ஏதோ ஒரு செலவு ஏற்பட்டு விடுவதால் நம் கையில் பணம் தங்காமல் சென்று விடுகிறது.இதனால் சம்பாதித்து என்ன பயன் என்று மனசு விரக்தி நிலைக்கு சென்றுவிடுகிறது.வீட்டிற்கு எப்பொழுதும் கடவுள் அருள் இருக்க வேண்டும்.அப்பொழுது தான் நம் வீட்டில் தேவை இல்லா செலவுகள் ஏற்படுவது குறைந்து பணம் கையில் தாங்கும்.ஆனால் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் வந்த பணம் வாசல் வழியே அப்டியே சென்று விடும்.

நம்மிடம் பணம் தங்காமல் போக பல்வேறு கரணங்கள் சொல்லப்படுகிறது.இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் பூஜை அறையை முறையாக பராமரிப்பது கிடையாது.தீபாவளி,பொங்கல் என்று பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை சுத்தம் செய்யாமல் வாரத்திற்கு ஒரு முறை செவ்வாய்,வெள்ளி தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டை துடைப்பது மிகவும் நல்லது.அதே போல் பூஜை செய்யும் நாட்களில் சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது.பண்டிகை காலங்களில்,நல்ல நாட்களில் நாம் செய்யும் சில தவறுகளால் தான் நம்மிடத்தில் பணம்,செல்வம் தங்கமால் தேவையற்ற செலவுகள் நம்மை துரத்தி வருகிறது.

வீட்டில் பணம் நிரம்பி வழிய கடைபிடிக்க வேண்டிய எளிய பரிகாரம்:-

முதலில் இந்த பரிகாரம் மேற்கொள்வதற்கு முன் வீட்டு பூஜை அறையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.பழைய மாலை,காய்ந்த பூக்கள் இருந்தால் அதை முறையாக அப்புறப்படுத்தவும்.
பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும்.அடுத்து மண்சட்டி ஒன்றை எடுத்து அதில் பாதி அளவு நாணயங்களை நிரப்பி வைக்கவும்.

நாணயங்கள் தெரியும்படி பானையின் மேல் பகுதியில் ஒரு கண்ணடியை வைக்கவும்.பிறகு வாசனை நிறைந்த மல்லிகை பூக்களை கொண்டு அந்த பானைக்கு பூஜை செய்யவும்.

இந்த பூஜையை தினமும் அதிகாலை நேரத்தில் 4 மணி முதல் 6 மணிக்குள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் தேவையற்ற செலவு ஏற்படாமல் பணமும்,செல்வமும் அதிகரிக்க தொடங்கும்.சம்பாதிக்கும் பணம் பன்மடங்கு பெருகும்.

Previous articleவாயு தொல்லையை சரி செய்யும் “கற்பூரவள்ளி இலை குழம்பு” – செய்வது எப்படி?
Next articleவெறும் 2 நிமிடத்தில் உடலில் உள்ள மொத்த சூடும் குறையும்!! அற்புத பாட்டி வைத்தியம்!!