நரை முடி அடர் கருமையாக வேண்டுமா? இரசாயனம் கலந்த ஹேர் டைக்கு குட் பாய் சொல்லிவிட்டு இதை பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்!!

Photo of author

By Divya

நரை முடி அடர் கருமையாக வேண்டுமா? இரசாயனம் கலந்த ஹேர் டைக்கு குட் பாய் சொல்லிவிட்டு இதை பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்!!

தலைமுடி கருப்பாக இருந்தால் நாம் இளமை தோற்றத்தில் இருப்போம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.நாம் தாத்தா பாட்டி காலத்தில் 45 வயதை தாண்டினால் தான் வெள்ளை முடி தலையில் எட்டி பார்க்கும்.காரணம் அவர்களது வாழ்க்கை மற்றும் உணவு பழக்க வழங்கங்கள் ஆரோக்கியமான ஒன்றாக இருந்தது.

ஆனால் இன்றைய காலத்தில் சிறுவர்கள்,இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு உருவாகி விட்டது.இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது,தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது,ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது.

தலையில் நரை முடி எட்டி பார்க்க தொடங்கிவிட்டால் உடனே இரசாயனம் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதை அனைவரும் வழக்கமாக்கி வருகின்றனர்.ஆனால் இந்த இரசாயனம் கலந்த ஹேர் டையால் முடி கொட்டுதல்,உடல் சார்ந்த பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டு விடும்.
இதற்கு இயற்கை வழிகளில் தீர்வு காண முயற்சிப்பது சிறந்த ஒன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரவள்ளி இலை – 1 கைப்பிடி அளவு

வைட்டமின் ஈ மாத்திரை – 2

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 1 கைப்பிடி அளவு கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

இந்த கற்பூரவள்ளி இலைகளை ஒரு தட்டிற்கு மாற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில்நறுக்கி வைத்துள்ள கற்பூரவள்ளி இலைகளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு இதில் வைட்டமின் ஈ மாத்திரை 2 சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த கலவையை உபயோகிப்பதற்கு முன் தலைமுடியை ஷாம்பு (சீகைக்காய் அல்லது அரப்பு)பயன்படுத்தி நன்கு அலசிக் கொள்ளவும்.

பின்னர் முடியை நன்கு காயவைத்து கொள்ளவும்.அடுத்து இந்த கற்பூரவள்ளி + வைட்டமின் ஈ மாத்திரை கலவையை கூந்தல் முழுவதும் அப்பளை செய்யவும்.குறிப்பாக முடிகளின் வேர்காள் பகுதியில் போட்டு மஜாஜ் செய்யவும்.

1 மணி நேரம் வைத்திருந்து பின்னர் தலைக்கு சீகைக்காய் அல்லது அரப்பு உபயோகித்து நன்கு அலசிக் கொள்ளவும்.இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் தலை நரை அனைத்தும் கருமையாகிவிடும்.