ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ வேப்பிலையை மஞ்சளுடன் இப்படி பயன்படுத்துங்க!
வேப்பிலையை பற்றி அனைவருக்கும் பல தகவல்கள் தெரியும். இந்த இலை மட்டுமில்லாமல் வேப்பிலை மரத்தின். பூ, காய், பட்டை, வேர் என வேப்பிலையின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. அதே போலத்தான் மஞ்சளும். மஞ்சள் இயற்கையான கிருமி நாசினியாக பயன்பட்டு வருகின்றது. இந்த மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து பயன்படுத்தும் பழுது நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அந்த வகையில் இந்த பதிவில் வேப்பிலையுடன் மஞ்சளை பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் முக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள் மற்றும் வேப்பிலையை சேர்த்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகள்…
* மஞ்சள் மற்றும் வேப்பிலையை ஒன்றாக அரைத்து குடித்தாலோ அல்லது வேறு எதாவது முறையில் சாப்பிட்டாலோ நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மஞ்சள் மற்றும் வேப்பிலையில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மைகள் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
* அதே போல நாம் வேப்பிலை மற்றும் மஞ்சளை ஒன்றாக வைத்து சாப்பிடும் பொழுது நம்முடைய வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகின்றது. மேலும் வயிற்றில் உள்ள செரிமான மண்டலம் பலம் பெற்று ஜீரண சக்தி அதிகரிக்கின்றது.
* வேப்பிலை மற்றும் மஞ்சளை அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம். சருமத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளையும் நீக்க நாம் வேப்பிலை மற்றும் மஞ்சளை ஒன்றாக வைத்து அரைத்து சருமத்தில் பூச வேண்டும். அவ்வாறு பூசினால் சருமத் தொற்றுக்கள் அனைத்தும் நீங்கும். சருமம் ஆரோக்கியம் பெறும்.
* வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டையும் ஒன்றாக அரைத்து பானமாக குடிக்கலாம். இது சிறந்த ஒரு டீடாக்ஸ் பானமாக விளங்குகின்றது. வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டையும் நாம் பானமாக பயன்படுத்தும் பொழுது நம்முடைய உடலுக்குள் இருக்கும் கிருமிகள் அனைத்தையும் வெளியேற்றுகின்றது. மேலும் மஞ்சள் வேப்பிலை இரண்டும் சேர்ந்து உள்ளே செல்லும் பொழுது நம்முடைய உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கின்றது.