சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்ய வேண்டுமா? காய்ச்சாத பால் மட்டும் போதும்!
நம்முடைய சருமத்தை ஒரே ஒரு பொருளை மட்டும் கொண்டு இயற்கையாகவே சுத்தப்படுத்தி எவ்வாறு பொலிவாகவும் பளபளப்பாகவும் மாற்றுவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
இயற்கையாகவே நம்முடைய சருமத்தை சுத்தப்படுத்தி அழகாக மாற்ற உதவும் அந்த ஒரு பொருள் இயற்கையாக கிடைக்கக் கூடிய பால் ஆகும். அதுவும் காய்ச்சாத பச்சை பாலில் நம்முடைய சருமத்தை சுத்தப்படுத்தும் திறன் உள்ளது.
காய்ச்சிய பாலை விட காய்ச்சாத பாலில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. காய்ச்சாத பாலை நம்முடைய சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்தின் உள்ள அழுக்குகள் நீங்கி பொலிவு பெறும். இறந்த செல்கள் வெளியேறி சருமம் பளபளப்பாக மாறும்.
இந்த காய்ச்சாத பாலை நாம் இரண்டு விதங்களில் நம்முடைய சருமத்திற்கு பயன்படுத்தலாம். அது எவ்வாறு என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
வழிமுறை 1…
காய்ச்சாத பால் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பஞ்சை எடுத்து அதை காய்ச்சாத பாலில் தொட்டு பின்னர் நம்முடைய முகம், கை, கழுத்து, கண்கள், வாய்ப்பகுதி ஆகியவற்றில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இது நன்கு காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரை பயன்படுத்தி பால் தேய்த்த இடங்களை கழுவ வேண்டும். இதை ஒரு நாளுக்கு மூன்று முறை செய்து வந்தால் சருமம் அழகாகும்.
வழிமுறை 2…
காய்ச்சாத பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதை முகத்தில் தேய்த்து குளிர்ந்த நீரை கொண்டு கழுவி வந்தாலும் முகம் பளபளப்பாகவும் அழகாகவும் மாறும்.