சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிட்டால்போதும்..!

0
132
#image_title

சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிட்டால்போதும்…!

கல்யாண பெண்கள் சத்தான உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் கருத்தரித்து விடுவார்கள். புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் சீக்கிரம் குழந்தை வேண்டும் என்றால், கருவின் ஆரோக்கியம் முக்கியம். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும். புது தம்பதியர் இருவரும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

சீக்கிரம் கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் எப்படி சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம் –

காய்கறிகள்

காய்கறிகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. பச்சை இலை காய்கறிகள், அடர் பச்சை நிற இலைகள், ப்ரக்கோலி,முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, கேரட் உட்பட பல காய்கறிகளை சாப்பிட்டால் சீக்கிரம் பெண்கள் கருத்தரித்து விடுவார்கள்.

கீரைகள்

காய்கறிகளில் எந்த அளவிற்கு சத்துக்கள் உள்ளதோ, அதேபோல் கீரைகளிலும் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. தினமும் கீரை வகைகளை சாப்பிட்டு வந்தால் புதுமண தம்பதிகளுக்கு சீக்கிரம் கருத்தரித்து விடுவார்கள்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் பைபர்கள், புரத சத்துக்கள், இரும்பு சத்து, ஃபோலேட் உட்பட பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளன. அதபோல், பீன்ஸ்,சோயாபீன்ஸ், கொண்ட கடலை, பட்டாணி கடலை, வேர்கடலை போன்றவற்றிலும் சத்துக்கள் உள்ளன. எனவே, இந்த பருப்பு வகைகளை சாப்பிட்டு வந்தால் தம்பதிகளுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிட்டும்.

பழங்கள்

தினமும் நிறைய பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை பயக்கும். ஏனென்றால், பழங்களில் ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. மேலும், வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. ஒவ்வொரு பழங்களிலும் கருவுறுதலை மேம்படுத்தும். மேலும், ஆரஞ்சு, சாத்துகுடி போன்ற சிட்ரஸ் பழங்கள் இனப்பெருக்க செயல்பாட்டை அதிகரிக்கும். எனவே, வைட்டமின் சி ஊட்டச்சத்து கொண்ட பழங்களை பெண்கள் சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் கருத்தரிப்பார்கள்.

பேரிட்சை பழம்

புதுமணத் தம்பதிகள் தினமும் பேரிட்சை பழங்களை சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் பெண்கள் கருத்தரித்து விடுவார்கள். ஏனென்றால் பேரிச்சை பழத்தில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிப்படுத்தும். கருப்பையை உறுதியாக்கும்.

பால்  பொருட்கள்

சீக்கிரம் கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் பால், பால் பொருட்கள் சாப்பிட்டு வர வேண்டும். ஏனென்றால், பாலில் கால்சியம், நல்ல கொழுப்புகள், வைட்டமின் டி அடங்கியுள்ளன. பாதாம் சேர்த்த பாலை சாப்பிட்டு வந்தால், கருவுறுதலை இயற்கையாக ஊக்குவிக்கும்.

மீன் வகைகள்

புதுமணத் தம்பதிகள் மீனை சாப்பிட்டு வந்தால் நன்மை பயக்கும். ஏனென்றால், ஒமேகா 3 கொழுப்பு உள்ளது. ஷெல் பிஷ், சிப்பி உணவு, சால்மன் மீன் அதிகம் சாப்பிட்டால் பெண்கள் சீக்கிரம் கருத்தரித்து விடுவார்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 மீன் வகைகளை ஆண்கள் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Previous articleதெருவே கமகமக்கும் கொத்தமல்லி சாதம் – சுவையாக செய்வது எப்படி?
Next articleசுவையான திணை அப்பம் – செய்வது எப்படி?