ஒரே வாரத்தில் உடல் பருமன் அதிகரிக்க வேண்டுமா! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்!

ஒரே வாரத்தில் உடல் பருமன் அதிகரிக்க வேண்டுமா! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்!

ஒரு சிலருக்கு எந்தவிதமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் உடல் பருமன் மட்டும் அதிகரிக்காது ஆனால் ஒரு சிலருக்கு எந்த சத்தான பொருட்களை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் அது அவரவர்களின் உடல்நிலை மற்றும் ஜீன்களை பொருத்தது.

மேலும் ஒவ்வொருவருக்கு சத்து குறைபாட்டினால் கூட உடல் பருமன் அதிகரிக்காமல் மிக ஒல்லியாகவே இருப்பார்கள். அவர்களுக்கு உடல் பருமனை அதிகரிக்க என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

அதற்காக முதலில் நம் உடலில் உள்ள வெப்பநிலையை குறைத்து சரிசமமாக வைத்துக் கொண்டு அதன் பிறகு சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் பருமன் கண்டிப்பாக அதிகரிக்கும். முதலில் உடலில் உள்ள வெப்பத்தை குறைப்பதற்கு தினமும் காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்து விட்டு ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் இரவு வைத்த பழைய சாதத்தை மிக்ஸியில் சிறிதளவு தயிர் சேர்த்து அரைத்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அந்த தண்ணீரை மட்டும் காலை நேரத்தில் பருகி வந்தால் உடல் பருமன் அதிகரிக்கும். இவ்வாறு குடித்து வந்தாலும் உடலில் உள்ள வெப்ப நிலை குறை தொடங்கும்.

அதன் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் எடுத்து அதனை இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்து விட்டு வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை நீரை குடிக்க வேண்டும். இதுவும் உடலில் உள்ள வெப்பநிலையை குறைக்க உதவுகிறது. வாரத்தின் மூன்று முறை இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் அதிகரிக்கும். அதன் பிறகு ஒரு கைப்பிடி அளவு பச்சை பயிர் போன்ற தானியங்களை முளைகட்டி சாப்பிட்டு வர வேண்டும்.

அதன் பிறகு கொண்டக்கடலையை வேக வைத்து காலை மற்றும் மாலை நேரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம்,முந்திரி, உலர் திராட்சை போன்றவைகளில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளதால் தினமும் இதனை எடுத்துக் கொண்டால் உடல் பருமன் அதிகரிக்கும்.

காலையில் இரண்டு பேரிச்சம் பழம் மற்றும் இரவில் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் உடல் பருமனும் அதிகரிக்கும்.

Leave a Comment