விரைவில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதை பின்பற்றினாலே போதும்! 

Photo of author

By Amutha

விரைவில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதை பின்பற்றினாலே போதும்! 

வயதுக்கும்  உடலுக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்கும் அவசியம். இந்தியாவில் எடை குறைப்பிற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பிரைமரி காம்ப்ளக்ஸ். சிறு குழந்தையாக இருக்கும் பொழுது இதை கவனிக்க தவறினால் பெரியவர்கள் ஆனாலும் மிகவும் மெலிந்த தேகத்துடன் இருக்கக்கூடிய சூழல் உருவாகும்.  வளர்ந்த பின்னர் உடல் எடை குறைவாக இருந்தாலும் உடல் எடையை அதிகரிக்க கூடிய ஒரு ஹெல்த் ட்ரிங்க் தயாரிக்கும் வழிமுறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. வேர்க்கடலை

2. எள்ளு

3. உளுந்து

4. பூசணி விதைகள்

5. பாதாம் பருப்பு

இவை ஐந்தையும் சமமான அளவில் எடுத்துக் கொள்ளவும்.  அதாவது 50 கிராம் என்றால் அனைத்தையும் 50 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். பாதாம் பருப்பை தவிர மற்ற நான்கையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். சிறிது ஆறியதும் பாதாம் பருப்பையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.  தேவைப்படும் பொழுது பயன்படுத்தலாம்.

இதிலிருந்து ஒரு 2 ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு காய்ச்சிய பாலில் கலந்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை என இருவேளைகளிலும் குடித்து வர 20 நாட்களில் உடல் எடையில் நல்லதொரு மாற்றத்தை காண முடியும். இந்த பானத்தில் நீங்கள் சர்க்கரைக்கு பதில் தேன் சேர்ப்பது தான் ஆரோக்கியமாக இருக்கும்.

மெலிந்த உடல்வாகு உடையவர்களுக்கு எள்ளும் ஒழுங்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இட்லி, தோசைக்கு எள்ளு பொடி பயன்படுத்தலாம்.

அதேபோல் சிற்றுண்டியாக வேர்கடலை உருண்டை எள்ளுருண்டை அதிகம் சாப்பிட கொடுக்கலாம்.