தனியார் வங்கியில் கடன் பெற்றதற்கு நிலத்தை அபகரிக்க வந்த பேங்க் ஊழியர்கள்!! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!!

0
95

தனியார் வங்கியில் கடன் பெற்றதற்கு நிலத்தை அபகரிக்க வந்த பேங்க் ஊழியர்கள்!! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!!

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மேட்டுவெள்ளாளர்தெரு பகுதியில் மோகன் என்பவரின் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது விவசாய நிலத்தை ஜெயராமன் என்பவர் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இதனிடைய மோகன் என்பவர் வங்கியில் விவசாய நிலத்தின் மீது தொழில் கடன் பெறப்பட்டுள்ளது.

கடனுக்கான வட்டியை மாதம்தோறும் செலுத்தி வரும் நிலையில் திடீரென இந்த இடத்தை மாற்று நபருக்கு வங்கி மூலம் எழுதிக் கொடுத்து விட்டதாகவும் நிலத்தை காலி செய்யும்படியும் கடந்த இரண்டு மாதங்களாக வங்கி நிர்வாகம் ஜெயராம் என்பவரை அடி ஆட்களை கொண்டு வந்து மிரட்டி வந்துள்ளனர்.

இந்த கடன் தொடர்பாக ஐந்து வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல் நிலத்தை அபகரிக்க கடந்த இரண்டு மாதங்களாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே இன்று விவசாய நிலத்தில் அனைவரும் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது காவல்துறையுடன் வங்கி நிர்வாகத்தினர் வந்து நிலத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறினர்.

மேலும் வங்கிகளுக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் விவசாய நிலத்தை ஜப்தி செய்வதற்காக வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்த நபர் குடும்பத்துடன் விவசாய நிலத்தில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நிலத்தை காலி செய்ய மாட்டோம், விவசாயத்தை அழிக்க முயற்சிப்பதாக கூறி அதிகாரிகளே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வங்கி சார்பில் இருந்து இடத்தை சுற்றி வேலி அமைப்பதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே அப்பகுதி மக்கள் ஒன்று கூடினர் இதனால் நிலத்தை ஜப்தி செய்யாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர் காவல்துறையினர் ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டது.