உதடு வெடிப்பு உடனடியாக சரியாக வேண்டுமா!! இந்த இரு பொருட்கள் போதும்!!

0
35

உதடு வெடிப்பு உடனடியாக சரியாக வேண்டுமா!! இந்த இரு பொருட்கள் போதும்!!

இந்த பதிவில் உதடு வெடிப்பை இயற்கையான முறையில் எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். பொதுவாக குளிர்காலங்களில் தான் உதட்டில் வறட்சி ஏற்பட்டு வெடிப்பு உண்டாகும். பனிக்காலங்களில் அதிகமாக குளிர் இருப்பதால் உதடுகளில் சீக்கிரமாக வறட்சி ஏற்படுகிறது.

சில பேருக்கு குளிர்காலத்தில் மட்டுமல்லாமல் வெயில் காலங்களில் கூட உதட்டில் வறட்சி ஏற்பட்டு வெடிப்பு உண்டாகிறது. உதட்டில் வறட்சி ஏற்படுவதால் சில பேர் அதில் எச்சில் வைப்பார்கள். அவ்வாறு செய்யக்கூடாது ஏனென்றால் அதில் எச்சில் வைத்தால் அந்த வறட்சி இன்னும் அதிகமாகி ரத்தம் வடிவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இப்போது இந்த உதடு வெடிப்பதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதற்கான தீர்வை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்

இந்த ஆலிவ் ஆயிலையும் தேங்காய் எண்ணெயையும் நன்றாக கலந்து காலை மற்றும் இரவு இரு வேலைகளிலும் உதட்டில் நன்கு தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதனால் உதட்டில் ஏற்படக்கூடிய வெடிப்பு நீங்கிவிடும் மேலும் உதடு வறட்சி உதட்டில் ரத்தம் வழிதல் என எந்த பிரச்சனையும் இருக்காது.

இந்த உதடு வெடிப்பை உடனடியாக குணமாக பல பேர் கிரீமை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவ்வாறு பயன்படுத்துவதனால் உதடு கருமையாக மாற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பனிக்காலங்களில் உதடு வெடிப்பதற்கு முன்னதாகவே இந்த எண்ணையை ஒரு நாளைக்கு இரண்டு வேலைகள் உதட்டில் தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால் பனிக்காலத்தில் ஏற்படக்கூடிய உதடு வெடிப்புகள் நிச்சயமாக வராது.