கழுத்து கருமை மறைய வேண்டுமா? 3 நாட்களுக்கு இதை செய்தால் போதும்!!
பல பேருக்கு வெகு நாட்களாக கருப்பாக உள்ள கழுத்தை உடனடியாக சரி செய்யக்கூடிய ஒரு தீர்வை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி அளவு காபி தூளை எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு தேவையான அளவு தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளவும். இதையெல்லாம் சேர்த்து ஒரு பேஸ்ட் பதத்தில் தயார் செய்து கொள்ளவும்.
இந்த பேக்கை உபயோகப்படுத்துவதற்கு முன் கழுத்தில் ஒரு வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்த துணியை வைத்து ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பிறகு தயார் செய்து வைத்த பேக்கை கழுத்தில் போட்டு நன்கு தேய்த்துக் கொள்ளவும். மிகவும் அழுத்தி தேய்த்து விடக் கூடாது.
அது சருமத்தை காயப்படுத்தி விடும் மெல்லமாக தேய்த்தாலே போதும். அதில் உள்ள சர்க்கரை கழுத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையை தரும். இவ்வாறு ஐந்து நிமிடங்களுக்கு தேய்க்க வேண்டும். பிறகு ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது துணியை பயன்படுத்தி கழுத்தை துடைத்து எடுத்து விடலாம்.
இதன் பிறகு திரும்ப ஒரு பௌலில் ஒரு தேக்கரண்டி அளவு காபித்தூளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் பொடி அல்லது குளிக்க பயன்படுத்தப்படும் மஞ்சள் பொடி இல்லையென்றால் கஸ்தூரி மஞ்சளை சேர்த்துக் கொள்ளலாம். இதோடு அரை எலுமிச்சையை பிழிந்து விடவும்.
இதையெல்லாம் சேர்க்கும் போது நுரை வரும். பிறகு இதை கழுத்தில் அப்ளை செய்யவும். இதை அப்ளை செய்யும்போது எலுமிச்சம் பழத்தில் அந்த பேக்கை தொட்டு கழுத்து நன்கு தேய்த்து வரவும். இவ்வாறு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் தேய்த்தால் போதுமானது தேய்த்து விட்டு 5 லிருந்து ஏழு நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
பிறகு ஒரு துணியை வைத்து துடைத்து எடுத்து விட்டு தண்ணீரில் கழுத்தை கழுவி விடவும். இதனால் கழுத்தின் கருமைகள் உடனடியாக நீங்கிவிடும். நாள்பட்ட கழுத்து கருமைகள் உள்ளவர்கள் இதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு செய்யவும். இதை கழுத்திற்கு மட்டுமல்லாமல் கைமுட்டி, கால் முட்டி கருப்பாக உள்ள பகுதிகளிலும் உபயோகப்படுத்தலாம்.
இவ்வாறு செய்வதனால் சிலருக்கு எரிச்சல் தன்மை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கழுத்தை கழுவி எடுத்த பிறகு சிறிதளவு தேங்காய் எண்ணெயை தேய்த்துக் கொள்ளவும்.