வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!! கனமழையா? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!! 

0
150
#image_title

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!! கனமழையா? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!! 

வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில்  புதியதாக உருவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இதன்படி  வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதிகளின் கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருகிறது. இதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றும் நாளையும் கட்டாக் ஜாஜ்பூர், தேன்கனல், கியோன்சர், மயூர்பஞ்ச், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு இன்றும் நாளையும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலாசோர், பத்ரக் கேந்திரபாரா, ஜகத்சிங்பூர், கோர்தா, பூரி, நாயகர், அங்குல், காந்தமால், பௌத் சோனேபூர், சம்பல்பூர், தியோகர், சுந்தர்கர், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தற்போது தான் அரபிக் கடலில் மையம் கொண்ட புயல் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்ததாக தற்போது வங்க கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருமாறுமா? இல்லையா? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.