விரும்பிய வேலை விரைவில் கிடைக்க ஆசையா? அப்போ இந்த மந்திரத்தை 48 முறை சொல்லுங்கள்!!

Photo of author

By Divya

விரும்பிய வேலை விரைவில் கிடைக்க ஆசையா? அப்போ இந்த மந்திரத்தை 48 முறை சொல்லுங்கள்!!

இன்றைய உலகில் வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகி விட்டது. அதுவும் நம் படிப்பிற்கு தகுந்த வேலை என்பது கேள்விக்குறி தான். நாம் என்ன வேலை வேலை செய்ய ஆசைப்படுகின்றமோ அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருவதோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவதும் நல்ல பலனைக் கொடுக்கும்.

தினமும் காலை குளித்தவுடன் ஒரு கண்ணாடி கிளாஸ் முழுவதும் தண்ணீர் நிரப்பி அதை எடுத்துக் கொண்டு ஓரமாக ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளவும்.

பின்பு உங்கள் இடது கையில் கிளாஸைப் பிடித்துக் கொண்டு வலது கையால் அதை மூடிக் கொண்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதார மனமுருகி நினைத்து கண்களை மூடி இந்த அம்பிகா தேவியையும் நினைத்து விரைவில் வேலை கிடைத்து விட வேண்டும் என்று உளமார வேண்டிக் கொண்டு இந்த மந்திரத்தை 48 முறை சொல்லி அந்த தண்ணீரில் ஊதி குடித்து விடவும்.

மந்திரம்:

அம்பிகா ஆனந்தினிதன

அஷ்வரூடா அபராஜிதா

இதேபோல் தொடர்ந்து முழு நம்பிக்கையோடு 27 நாட்கள் செய்யவும். ஆனால் அதற்குள்ளாகவே நிச்சயம் உங்கள் மனதிற்கு பிடித்த வேலை கிடைத்து விடும். முடிந்தவர்கள் பூஜை அறையில் விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி செய்யவும்.