சரசரவென முடி வளர வேண்டுமா! அப்போது விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள் !!

Photo of author

By Sakthi

சரசரவென முடி வளர வேண்டுமா! அப்போது விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள் !!

Sakthi

சரசரவென முடி வளர வேண்டுமா! அப்போது விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்
பெண்களுக்கு மிக நீளமாகவும் அடர்த்தியாகவும் கூந்தல் வளர்வதற்கு விளக்கெண்ணையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
விளக்கெண்ணையை நாம் தலைமுடிக்கு தேய்த்து பயன்படுத்தும் பொழுது முடிக்கு தேவையான பல சத்துக்களை விளக்கெண்ணெய் வழங்குகின்றது. இந்த விளக்கெண்ணயுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து பயன்படுத்தும் பொழுது பெண்களின் கூந்தல் மிக வேகமாக வளரும்.
விளக்கெண்ணெயை தலைக்கு பயன்படுத்தும் முறை…
விளக்கெண்ணெய் சற்று திக்காக இருக்கும். அதனால் இதை அப்படியே தலைக்கு தேய்க்காமல் சிறிதளவு இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
அதற்கு முதலில் விளக்கெண்ணெயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் கலக்கிய இந்த எண்ணெயை லேசாக சூடு செய்ய வேண்டும்.
பின்னர் லேசாக சூடு செய்த இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இதை தேய்த்து விட்டு அப்படியே விடக்கூடாது. அரை மணி நேரம் கழிந்து தலைக்கு குதிக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் சில…
* இந்த எண்ணெயை தேய்ப்பதால் தலைமுடி வலிமைப்படும்
* இந்த எண்ணெயில் உள்ள சத்துக்கள் முடியின் வளர்ச்சியை தூண்ட உதவுகின்றது.
* இந்த எண்ணெய்யை தேய்யப்பதன் மூலமாக தலைமுடி உடைந்து விழுவதை தடுக்கலாம்.
* இந்த எண்ணெயை தேய்த்து வந்தால் முடி மென்மையாக மாறும்.
* இந்த எண்ணெய் முடியின் அழகை மேம்படுத்தும்.