பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்க!
வருமானம் ஈட்டுவதை விட அதை அதை முறையாக சேமித்து வைப்பது தான் முக்கியம். சம்பதிக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் அதில் சிறுத் தொகையை சேமிப்பாக எடுத்து வைக்க வேண்டும்.
இவ்வாறு நாம் சேமிக்கும் பணம் அதிகரிக்க அதாவது பண வரவு அதிகரிக்க நாம் சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
பண வரவு அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்…
முதலில் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பணப் பெட்டி ஒன்றை வாங்கிக் கொள்ளவும். இதை வியாழக் கிழமை அன்று மதியம் 1-1.30 மணிக்குள் வணங்குவது சிறப்பு.
அத்துடன் பெட்டிக்குள் வைக்கும் அளவிற்கு ஒரு சிவப்பு வெல்வெட் துணியை அதில் போட்டு வைக்கவும்.
அடுத்து 9 கோமதி சக்கரம், 9 சோழிகள், 9 தாமரை மணி, 9 குன்றின் மணி, சிறிது வெட்டி வேர் அனைத்தும் வாங்கி கொள்ளவும்.
வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அந்த பணப்பெட்டியை லேசாக பன்னீர் தொட்டு துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து பின் அதில் சிவப்பு வெல்வெட் துணியை வைக்கவும்.
அதற்கு மேல் கோமதி சக்கரம், சோழி, வெட்டி வேர், 3 பட்டை, 9 இலவங்கம், 9 ஏலக்காய், சிறிது பச்சைக் கற்பூரம் அனைத்தையும் வைத்து அதற்கு மேல் மற்றொரு வெல்வெட் துணி போட்டு மூடி அதன் மேல் பணத்தை வைத்து பூஜை அறையில் தூப தீபம் காட்டி வழிபட்டு பணப் பெட்டியை பீரோவில் வைக்கவும். இவ்வாறு செய்தால் பண வரவு அதிகரிக்கும்.