உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த அறிகுறிகள் தான் ஏற்படும்!
பொதுவாக நம் உடலில் நீர் சத்து என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். நம் உடலில் நீர் சத்து குறைந்து விட்டால் நம்மால் இயல்பாக இருக்க முடியாது. நீர் சத்து குறைவாக இருந்தால் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
நீர் சத்து குறைவாக உள்ள சமயங்களில் மூளைகளில் உள்ள ரத்த நாளங்கள் மெதுவாக சுருக்க ஆரம்பித்து கடுமையான தலைவலி மற்றும் தலைசுற்றல் போன்றவைகள் ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படும்.
மேலும் உடலில் நீர் சத்து குறைந்து உடல் வறட்சியாக இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதிக அளவு வியர்வை சுரந்தால் சரும வறட்சி ஏற்படுகிறது. ஆனால் உடல் வறட்சி என்பது நீர் சத்து குறைவதால் தான் ஏற்படுகின்றது.
நீர் சத்து குறைந்தால் உடலில் ரத்த அளவும் குறைகின்றது. மேலும் தசைப் பிடிப்பு பிரச்சனையும் ஏற்படுகின்றது. அதிக அளவு நீர் சத்து குறைய தொடங்கினால் குளிர் எடுத்தல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் தோன்றும்.
மேலும் நாக்கு மற்றும் உதடுகள் வரச்சையாகவே காணப்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் நாம் பருகும் நீரின் அளவை அதிகப்படுத்து வேண்டும். மேலும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதயம் அதிகமாக துடித்து எளிதில் சோர்வு நிலை ஏற்படும்.
இதற்காக தர்பூசணி, சுரைக்காய், வெள்ளரிக்காய், தக்காளி போன்றவைகளை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் அப்போது நீரின் அளவு அதிகரிக்கும்.