Health Tips

ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இதனை ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இதனை ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரும் பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சர்க்கரை தான். அதனை ஒரே வாரத்தில் எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டு பொருட்கள் மட்டும்இருந்தால் போதும். வெற்றிலை மற்றும் வேப்பிலை. வெற்றிலை என்பது நாம் உணவு அருந்திய பிறகு எடுத்துக் கொண்டால் சீரான முறையில் ஜீரணம் ஆகும். மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். நம் முன்னோர்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் தினந்தோறும் வெற்றிலை எடுதுக் கொண்டது தான்.

முதலில் வெற்றிலையை எடுத்து அதனுடைய காம்பு, நுனி மற்றும் நடுப்பகுதியில் கிள்ளி கொள்ள வேண்டும். அதன் பிறகு வேப்பிலை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உடலில் உள்ள புழுக்களை வெளியேற்றி குடலை சுத்தம் செய்ய உதவுகிறது.மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள வெற்றிலை மற்றும் வேப்பிலையை சேர்க்க வேண்டும். இதனை நன்கு கொதிக்க வைத்து அதன் பிறகு ஆரிய பிறகு ஒரு டம்ளரில் வடிகட்டி காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு குடித்து வந்தால் ஒரே வாரத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.