ஆரோக்கியமாக உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க்கை தினமும் ஒரு கிளாஸ் பருகுங்கள்!!
இன்றைய கால உணவு பழக்க வழக்கங்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விதமாகத் தான் இருக்கிறது.
நம் உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும்.
உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:-
*துரித உணவு
*அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு
*நிம்மதியற்ற தூக்கம்
*எண்ணெயில் பொரித்த உணவு
*மன அழுத்தம்
*உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமை
*அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல்
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வழிகள்:-
*தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்தல்
*வாக்கிங், ஜாகிங் செல்லுதல்
*உடல் உழைப்பு
*எண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவை தவிர்த்தல்
*நிம்மதியான உற்றகம்
*பழச்சாறு, நட்ஸ் சாப்பிடுதல்
உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க வழி:-
தினமும் ஒரு கிளாஸ் ஆப்பிள் சீடர் வினிகர் ட்ரிங்க் பருகி வந்தோம் என்றால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு முழுவதும் உடல் பிட்டாக இருக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகரில் அமினோ அமிலங்கள், பொட்டாசியம், ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.
ஆப்பிள் சீடர் வினிகர் ட்ரிங்க் பயன்கள்:-
*உடல் பருமன் குறையும்
*நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
*நச்சு கழிவுகள் வெளியேறும்
*தேவையற்ற கொழுப்பை கரைக்கும்
*பசியை கட்டுக்குள் வைக்க உதவும்
*முகம் பொலிவு பெறும்
*முடி வளர்ச்சி
*அசிடிட்டி பிரச்சனை சரியாகும்
*செரிமான பிரச்சனை நீங்கும்
ஆப்பிள் சீடர் வினிகர் ட்ரிங்க் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
*ஆப்பிள் சீடர் வினிகர்
*தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அவை வெதுவெதுப்பானதும் அடுப்பை அணைத்து ஒரு டம்ளருக்கு ஊற்றிக் கொள்ளவும்.
அடுத்து ஆப்பிள் சீடர் வினிகர் 2 தேக்கரண்டி அளவு அதில் சேர்த்து கலந்து பருகவும். இதை காலையில் உணவு உண்பதற்கு 1/2 அல்லது 3/4 மணி நேரத்திற்கு முன் பருக வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து பருகுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் பிட்டாகவும், ஆரோக்யமாகவும் இருக்கும்.